பாரதிய ஜனதா பரப்பி வரும் வெறுப்புக்கும், கோபத்துக்கும் எதிரானது தான் தனது ஒற்றுமை நடைபயணம்: ராகுல்காந்தி பேச்சு

பெங்களூரு: பாரதிய ஜனதா பரப்பி வரும் வெறுப்புக்கும், வன்முறைக்கும், கோபத்துக்கும் எதிரானது தான் தனது ஒற்றுமை நடைபயணம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தியில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, திரியூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் தனது போர் வெறுப்புக்கும், அன்புக்கும் இடையேயானது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா உடைக்கப்பட்டுவிட கூடாது. இந்தியா ஒற்றுமையுடனே இருக்கும் என்பதே பாரதிய ஜனதாவுக்கு தனது பயணம் அளிக்கும் செய்தி என்று ராகுல்காந்தி குறிப்பிட்டார். நாட்டிலேயே கர்நாட மாநிலம் தான் ஊழலில் ஊறி திளைக்கும் மாநிலம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். சாதாரண பணிமாறுதலுக்குக்கூட 40 சதவிகித கமிஷன் கேக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் 40% கமிஷன் அளித்துள்ளதாக அவர் கூறினார். ரூ.2,500 கோடிக்கு முதலமைச்சர் பதவியும், ரூ.80லட்சத்துக்கு SI பணிவாய்ப்பும் விற்பனை செய்யப்பட்டதாக பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வே கூறியதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Related Stories: