×

சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணி இன்று மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே இன்று காலை 8.25 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை மூர்மார்க்கெட் முதல் சூலூர்பேட்டை இடையே காலை 5.20, 7.45, 1.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (06741, 06749, 06743) அதேபோன்று, சூலூர் பேட்டை- மூர் மார்க்கெட் இடையே  பிற்பகல்  12.35, 6.35, 8.45, 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் 906742, 06752, 06744, 42426) இன்று ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே இன்று காலை 7.50, 10, 3.50  மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (06745, 06751, 06747) ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக நெல்லூர் -சூலூர் பேட்டை இடையே காலை 10.15, 6.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (06746, 06748), கூடூர் -சூலூர் பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (06750) ரத்து செய்யப்படுகிறது. ஆவடி-மூர்மார்க்கெட் இடையே காலை 4.25, 6.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (66000, 66004), மறு மார்க்கமாக மூர் மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 9.15, 11.30  மணிக்கு  இயக்கப்படும் ரயில்கள் (66003, 66007), மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் (42037) ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே காலை 7.30, 10.10, பிற்பகல் 2.30, மாலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (42407, 42413, 42421), கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35, பிற்பகல் 3.30 இரவு 7.05 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் (42411, 42419, 42423) எளாவூர்-சூலூர்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் 42410, 42418  காலை 11.35 மணி, மாலை 6.15 மணிக்கு இன்று பகுதியாக  ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central - ,Kudur , Electric trains canceled today for maintenance work between Central - Kudur: Southern Railway Notification
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...