புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது 2686 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம் 300 கன அடி‌யாக நீர்வரத்து தற்போது 485 கன அடியாக அதிகரித்து உள்ளது.

சென்னை மக்களின் குடிநீருக்காக 159 கனஅடி நீர்வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இருப்பு 156 மில்லியன் கனஅடி. நீர்வரத்து 119 கன‌அடி. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 72 மி.மீட்டரும், குறைந்தளவாக திருத்தணியில் 21 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

Related Stories: