செங்குன்றத்தில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி பாட்டில் மணி கைது

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை  பெரிய மார்க்கெட்  பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) பாட்டில்  மணி (24). பிரபல ரவுடி. இவர் மீது  கொலை, கொலை முயற்சி, வழிப்பறி,  மாமூல்  கேட்டபது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பூக்கடை ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக வாழ்ந்து வந்த பாட்டில் மணியை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள்அமைக்கப்பட்டு  பாட்டில் மணியை தேடி வந்தனர்.

இந்நிலையில் செங்குன்றம் பகுதியில்  பாட்டில் மணி பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று வண்ணாரப்பேட்டை  துணை ஆணையர்,  தனிப்படை உதவி ஆய்வாளர் புகாரி  தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று, செங்குன்றத்தில் பதுக்கியிருந்த பாட்டில்  மணியை மடக்கிப்பிடித்து  கைது செய்து  வண்ணாரப்பேட்டை  காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து வண்ணாரப்பேட்டை ஆய்வாளர்  தவமணி, பிரபல ரவுடி பாட்டில் மணியின் மீது  வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

Related Stories: