முலாயம் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் மறைந்தார் என்பதையறிந்து வருந்தினேன். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியலில் போராடிய மிக உயர்ந்த தலைவர்களுள் ஒருவரான முலாயம் சிங், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்   என பல தலைவர்கள் முலாயம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: