×

எல்ஐசி எம்எப் மல்டிகேப் நிதி புதிய திட்டம் தொடக்கம்

சென்னை: எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி என்னும் புதிய திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் தென் மண்டல தலைவர் வாசுதேவன் தேசிகாச்சாரி கூறியதாவது: எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் நிறுவனம், புதிய மல்டிகேப் நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 6ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை திறந்திருக்கும். இதன் வாயிலாக 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திரட்டப்படும் நிதியை, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் தலா 25 சதவீதம் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கு ஆபத்து, பிரீமியம், வட்டி விகிதங்கள் மற்றும் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் வைத்து, சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் பார்வைகளுக்கு ஏற்ப, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி இந்த திட்டம் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி  திட்டத்தின் நிதி மேலாளராக யோகேஷ் பாட்டீல் செயல்படுவார் என எல்ஐசி மியூச்சுவல் பண்ட் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

Tags : LIC , LIC MF Multicap Fund New Scheme Launch
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...