×

சில்லிபாயின்ட்...

* ஜாஸ்மின் ஓபனில் மெர்டன்ஸ் அசத்தல்
துனிசியாவில் முதல்முறையாக நடந்த ஜாஸ்மின் ஓபன் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (26 வயது, 36வது ரேங்க்) 6-2, 6-0 என நேர் செட்களில் பிரான்சின் ஆலிஸ் கார்னெட்டை (32வயது, 32வது ரேங்க்) வீழ்த்தி பட்டம் வென்றார்.

* ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா
மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது கடைசி ரவுண்டு ராபின் லீக் ஆட்டத்தில் தாய்லாந்துடன் நேற்று மோதிய இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, தாய்லாந்து 15.1 ஓவரில் 37 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் ஸ்நேஹ் ராணா 3, தீப்தி, ராஜேஷ்வரி தலா 2, மேக்னா சிங் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 6 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மேகனா 20*, வஸ்த்ராகர் 12* ரன் எடுத்தனர். இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

* முஷ்டாக் அலி டி20 இன்று தொடக்கம்
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, கர்நாடகா, பெங்கால், கேரளா, ராஜஸ்தான், விதர்பா, ஐதராபாத், குஜராத் உட்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. எலைட், பிளேட் பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். லீக் சுற்று அக். 22 வரை லக்னோ, ராஜ்கோட், மொகாலி, இந்தூர், ஜெய்பூரில் நடைபெற உள்ளது. நாக் அவுட் ஆட்டங்கள் அக். 30 - நவ.2 வரையும், பைனல் நவ. 3ம் தேதியும் நடக்க உள்ளன. தமிழ்நாடு முதல் ஆட்டத்தில் சட்டீஸ்கருடன் இன்று மோதுகிறது (வாஜ்பாய் ஸ்டேடியம், லக்னோ).

* சாஃப்ட் டென்னிஸ் ராகக்கு தங்கம்
குஜராத்தில் நடக்கும் 36வது தேசிய விளையாட்டு போட்டியின் மகளிர் சாஃப்ட் டென்னிஸ் பைனலில் மத்திய பிரதேசத்தின் அதயா திவாரியுடன் மோதிய தமிழக வீராங்கனை ராகஸ்ரீ (வேலூர்) 4-1 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே தொடரின் மகளிர் கால்பந்து 3வது இடத்துக்கான மோதலில் 5-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வென்ற தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.


Tags : Sillypoint...
× RELATED சில்லிபாயின்ட்...