மாவட்ட அளவிலான வணிக சீர்திருத்த செயல் திட்டம்: பதிவாளர்களுக்கு ஐஜி உத்தரவு

சென்னை: மாவட்ட அளவிலான வணிகச் சீர்திருத்த செயல் திட்டம் 2022 நடைமுறைப்படுத்துதல், அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக துணைப் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்களுக்குப் பதிவுத்துறை ஐஜி அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட அளவிலான வணிகச் சீர்திருத்த செயல் திட்டம் 2022 சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் எவ்வாறு செயலாக்கப்பட வேண்டும் என்பது குறித்து அனுப்பப்பட்டு நடைமுறைகளை மக்களிடம் தெரிவிப்பது அனைவரின் பொறுப்பு. துறை அதிகாரிகள் விண்ணப்பதாரர்களிடம் கேள்விகளை எழுப்பலாம் மற்றும் விண்ணப்பதாரர் அத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே செயலாக்கப்பட வேண்டும்.  விண்ணப்பம் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் செயல்முறையாக இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், விண்ணப்பதாரர் இந்த அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்க வேண்டும். புகார் நடவடிக்கை (அபராதம் விதித்தல்) கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தொடங்கப்படும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து அலுவலர்களும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு

கிறார்கள்.

Related Stories: