தேன்கனிக்கோட்டை: தேஜ கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 4 ராமர் பக்தர்கள் போலீசாரால் சுடப்பட்டு இன்னுயிர் நீத்தனர். அவர்கள் எதற்காக உயிர் நீத்தார்களோ அவர்களது கனவு நிறைவேறும் விதமாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.