முலாயம் சிங் உடலுக்கு டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: முலாயம் சிங் உடலுக்கு திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துகின்றனர். இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான தலைவர் முலாயம் சிங் மறைவையடுத்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவரது மகனும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். முலாயம் சிங் உடலுக்குக் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு,  இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: