வாடகை தாய் மூலம் குழந்தை நயன்தாராவிடம் விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: விக்னேஷ்சிவன்-நயன்தாரா முறையாக சட்ட விதிகளை பின்பற்றி வாடகை தாய் மூலத் குழந்தைகளை பெற்றார்களா என ஊரக மருத்துவ இயக்குனரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் இருக்கை, இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார். இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

 தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மருத்துவ பல்கலைகழக வரலாற்றில் இந்தியாவில் முதன் முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைகழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு பதில் அளித்துள்ளோம். எனவே ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது.

திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராஇரட்டை ஆண் குழந்தை பெற்றது தொடர்பாக மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. அதனால் விதிமுறைகளை மீறினார்களா என அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: