×

நவராத்திரி திருவிழாக் காலத்தில் கார் உள்ளிட்ட வாகன விற்பனை 57% அதிகரிப்பு: வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாக் காலத்தில் கார் உள்ளிட்ட வாகன விற்பனை 57% அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள் அனைத்தின் விற்பனையும் உயர்ந்துள்ளது. 2021 நவராத்திரியில் 3,42,459-ஆக இருந்த வாகனங்களின் விற்பனை இந்தாண்டு நவராத்தரியில் 5,39,227 ஆக உயர்ந்துள்ளது. 2021 நவராத்திரி காலத்தில் 3,42,213 ஆக இருந்த ஸ்கூட்டர் மோட்டார் பைக் விற்பனை இவ்வாண்டு 3,69,020 ஆக உயர்ந்துள்ளது. நவராத்தரி விழாக்காலத்தில் செப்.26 முதல்  அக்.5  வரை 1,10,500 கார்கள் விற்று உள்ளதாக வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


Tags : Navratri festival ,Confederation of Vehicle Dealers Association , 57% increase in sales of vehicles, including cars, during Navratri festival: Federation of Auto Dealers' Association announces
× RELATED ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா