×

2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு..!!

ஸ்டாக்ஹோம்: 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான அறிவிப்பு கடந்த 2ம் தேதி தொடங்கியது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு அன்னி எர்னாக்ஸ்-ஸிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று வரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பொருளாதார மந்தநிலைக்கு உலகம் தள்ளப்பட்டு வரும் நிலையில் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ben S. Bernack ,America , 2022, Economics, Nobel Prize
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!