×

பழநிக்கு வரும் பக்தர்களிடம் கைவரிசை காட்டும் திருட்டு கும்பல்-கண்காணிப்பை அதிகரிக்க கோரிக்கை

பழநி : பழநி வரும் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தடுக்க சுற்றுலா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். சீசன் துவங்க உள்ள நிலையில் பழநி கோயிலுக்கு தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பழநி கோயிலில் குவிந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பிறகு மேற்கு மற்றும் கிழக்கு கிரிவீதிகளில் உள்ள சுற்றுலா பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் சில திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணாடிகளை உடைத்தும், கதவுகளை திறந்தும், பிக்பாக்கெட் அடித்தும் பொருட்கள் மற்றும் பணத்தை திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் இருந்து பழநி கோயிலுக்கு வந்திருந்த பவன் செட்டி என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பொருட்களை சில மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர் செல்லும் சிசிடிவி காட்சி அப்பகுதியில் உள்ள சில சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளன.அதுபோல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேன்சி பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியை மர்ம ஆசாமி ஒருவர் தள்ளிச் சென்று அருகில் உள்ள கால்வாயில் தள்ளி விட்டு சென்றுள்ளார். இந்நிகழ்வும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. எனவே, போலீசார் அடிவாரம் பகுதியில் சுற்றுலா பஸ்நிலையங்கள், கிரிவீதிகளில் அநாவசியமாக சுற்றித்திரிபவர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளின் போர்வையில் சுற்றித்திரியும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Badani , Palani: To prevent gangs of robbers from showing their hand to pilgrims coming to Palani, surveillance should be intensified at tourist bus station and other places.
× RELATED பழநி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: மக்காச்சோளப் பயிர்கள் சேதம்