×

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் புலி நடமாட்டம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர வேண்டாம்-வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர் : கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன்வயல், அம்பல மூல, சேமுண்டி, கொரவயல், போஸ்பரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் உள்ளதாக வனத்துறைக்கு விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இப்பகுதியில் புலி மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் தென்படுவதால் மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்தந்த பகுதியில் புலியை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டது. வனத்துறையினர் புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதியில் புலியின் கால் பாத தடயங்கள் இருக்கின்றதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் வனத்துறை குழுவினர் இரவு நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம் காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராஜேந்திரன் மேற்பார்வையில் வனத்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tiger ,Sri Madurai Panchayat ,Forest Department , Kudalur: Manwayal, Ambalamula, Semundi, Koravayal, Bospara etc. areas under Sri Madurai Panchayat near Kudalur are some of the last ones.
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே...