×

வேதாரண்யம் பகுதியில் கேட்பாரற்று திரியும் மாடுகள் 12ம் தேதி முதல் பிடிக்கப்படும்-நகராட்சி அறிவிப்பு

வேதாரண்யம் :  வேதாரண்யம் நகராட்சி பகுதிகள்ஸமற்றும் கடைவீதிகளில் சுற்றிதிரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வரும் 11ம் தேதிக்குள் பிடித்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கபட்ட கால்நடை பட்டிகளில் அடைக்கபடும. அவ்வாறு பிடிக்கபடும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபாராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கபடும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையார் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வேதாரண்யம் பகுதியில்தற்சமயம் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மானாவரி பிரதேசமான இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம் ஆங்காங்கே சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர். மேலும் நகர் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று கால்நடைகள் சேதப்படுத்துகிறது. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் கேட்பாரற்று திரிகிறது. எனவே மாட்டின் உரிமையாளர்கள் தாங்களாக முன் வந்து மாட்டை பிடித்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் வயல்வெளிகள் கடைவீதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்படும் மாடுகளுக்கு, ரூபாய் ஆயிரம் அபராதமும் பராமரிப்பு செலவும் சேர்த்து மாட்டின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.



Tags : Vedaranayam , Vedaranyam: Cows roaming in Vedaranyam municipal areas and shopping streets should be removed by their owners by 11th.
× RELATED வேதாரண்யத்தில் தேசிய வாழைப்பழம் தினம் கொண்டாட்டம்