ரூ.856 கோடியில் உருவாகும் மகாகாலேஸ்வர் கோயில் 200 சிலை, 100 அழகிய தூண் சிவப்புராண சுவர் ஓவியங்கள்: உஜ்ஜைனியில் நாளை திறப்பு

உஜ்ஜைன்: உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் சீரமைப்பு பணிகளின் முதல் கட்ட பணிகள் முடிந்த நிலையில் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். ஒன்றியத்தில் பாஜ பதவியேற்றது முதல், கோயில்களை பிரமாண்ட முறைகளில் கட்டி வருகிறது. ஏற்கனவே உள்ள பிரபலமான பழைய கோயில்களை பல கோடி செலவில் புதுப்பித்து, சர்வதேச மக்களை கவரும் வகையில் மாற்றி அமைத்து வருகிறது.

அயோத்தியில் பல ஆயிரம் கோடியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பிரமாண்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை  கடந்தாண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற  உஜ்ஜைனின் மகாகாலேஸ்வர் கோயிலை மேம்படுத்துவதற்கான திட்டம், கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ரூ.856 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த கோயில் வளாகத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கோயிலின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* காசி விஸ்வநாதர் கோயிலை விட மகாகாலேஸ்வரர் கோயில் சீரமைப்பு திட்டம் 4 மடங்கு பெரியது.

* பழங்கால ருத்ர சாகர் ஏரிக்கரையில் இருந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

* இங்கு 200 சிலைகள், சுவரோவியங்கள் இடம் பெற்றுள்ளன.

* சிவன், சக்தி மற்றும் இதர கடவுள்களின் சிலைகள்  இடம் பெற்றிருக்கின்றன.

* சுவரோவியங்கள் சிவபுராணத்தில் வரும் கதையில் வரும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

* மேலும், கண்கவரும் வகையில் 108 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த கோயிலுக்காக 152 கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

* கோயில்  47 ஹெக்டேருக்கு விரிவுப்படுத்தப்படுகிறது

* கோயில் குளம் 17 ஏக்கரில் மேம்படுத்தப்படுகிறது.

* முக்கிய நுழைவாயிலில் இருந்து கோயில் வரை 93 சிவன் சிலைகள் வைக்கப்படுகிறது

* ஒன்றிய அரசின் புனித தலங்கள் மேம்பாட்டு மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

* 2ம் கட்ட திட்டத்தில்  மகாராஜ்வாடா, மகாகால் கேட், ருத்ரசாகர் உள்ளிட்ட பகுதிகள் மேம்படுத்தப்படுகிறது.

Related Stories: