மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்குவேன்: பொதுச் செயலாளர் துரைமுருகன் பேச்சு

சென்னை: மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்குவேன் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேசியதாவது: கலைஞர் கூட முதல்வரான பிறகு டெல்லிக்கு போய் அவர் அறிவாற்றலை காட்டி. அரசியல் சாணக்கியத்தை காட்டிய பிறகு தான் அங்கே பிரபலமானார். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமல் இங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியாவில் பிரபலமான பெருமை மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.

இன்னும் அவர் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டிற்கு தருவார். இந்த கழகம் மேலும் மேலும் வளர்வதற்கு உறுதுணையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக, ஆலோசனை சொல்ல, அவருடன் இருந்து பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: