×

சிறப்பு டெர்ம் டெபாசிட் கனரா வங்கி அறிமுகம்

பெங்களூரு: கனரா வங்கி, 666 நாட்களுக்கான சிறப்பு டெர்ம் டெபாசிட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து இந்த வங்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, 666 நாட்களுக்கான புதிய டெர்ம் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமகன்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். பிற வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டம் அதிக வட்டி பலன் வழங்கப்படும் திட்டமாகும். இவ்வாறு கனரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Canara Bank , Introduction of Special Term Deposit Canara Bank
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...