×

கான்வே அதிரடியில் நியூசி. அபார வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், வங்கதேசத்துடன் நேற்று மோதிய நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. நஜ்முல் ஷான்டோ 33, அபிப் உசேன் 24, கேப்டன் ஷாகிப் ஹசன் 16, லிட்டன் தாஸ் 15 ரன் எடுத்தனர். நூருல் ஹசன் ஆட்டமிழக்காமல் 25 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், சவுத்தீ, பிரேஸ்வெல் (4-0-14-2), ஈஷ் சோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.  

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஃபின் ஆலன் 16, கேப்டன் கேன் வில்லியம்சன் 30 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கான்வே 70 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 23 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரேஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று அணிகளும் தலா 2 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் பாகிஸ்தான் (4 புள்ளி), நியூசிலாந்து (2 புள்ளி) முன்னிலை வகிக்கின்றன. வங்கதேசம் தொடர்ச்சியாக 2 தோல்வியுடன் (0) பின்தங்கியுள்ளது. நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


Tags : Newsy ,Conway Action , Newsy in Conway Action. Great success
× RELATED சில்லி பாய்ன்ட்…