×

ஷ்ரேயாஸ், இஷான் அபார ஆட்டம் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. லக்னோவில் நடந்த முதல் போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தது. மார்க்ரம் 79, ஹெண்ட்ரிக்ஸ் 74, மில்லர் 35*, கிளாஸன் 30, ஜானிமன் மலான் 25, பார்னெல் 16 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3, சுந்தர், ஷாபாஸ், குல்தீப், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

கேப்டன் தவான் 13, கில் 28 ரன்னில் வெளியேற, 8.5 ஓவரில் 48 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய அணியை, இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து மீட்டனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 161 ரன் சேர்த்து அசத்தியது. இஷான் 93 ரன் (84 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இந்தியா 45.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து வென்றது. ஷ்ரேயாஸ் 113 ரன் (111 பந்து, 15 பவுண்டரி), சாம்சன் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க தரப்பில் பார்ச்சூன், பார்னெல், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது.

Tags : Shreyas ,Ishan ,India ,South Africa , Shreyas, Ishan's great performance helped India defeat South Africa
× RELATED அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு