ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்: முதல்வர் இரங்கல்

சென்னை: ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி (75) உடல்நலக்குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார். டிஜிபி டி.முகர்ஜி 2006 முதல் 2007 வரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி. முகர்ஜி அவர்களின் மறைவுச் செய்திகேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முகர்ஜி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர்.

நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்தவர். காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: