வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ45 லட்சம் மோசடி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

சென்னை: கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (49), (மாற்றுத்திறனாளி). இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அன்பு தென்னரசன் (52) மற்றும் அவரது மகன் சிலம்பரசன் இருவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ₹45 லட்சம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கேட்ட பணத்தை கொடுத்த ஜெயராமனுக்கு போலி ரசீதை வழங்கி உள்ளனர்.

இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த ஜெயராமன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதில், பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த ஜெயராமன் ஒரு கட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், வெகுநாட்களாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில், தலைமறைவான இருவரையும் விரைந்து பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அன்பு தென்னரசன் மற்றும் அவரது மகன் சிலம்பரசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: