×

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா

சென்னை: ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தவர் ஹன்சிகா. தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார். கடைசியாக தமிழில் மகா படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சினிமாவில் முன்னேற தொடர்ந்து அவர் போராடி வருகிறார். தற்போது காசேதான் கடவுளடா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் ஆகியவற்றை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு கண்ணன் இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மெட்ரோ படத்தில் நடித்த சிரீஷ் இதில் நடிக்க உள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை கொண்ட படம். இதனால் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ஹன்சிகா.

Tags : Hansika ,R. Kannan , Hansika directed by R. Kannan
× RELATED கார்டியன் விமர்சனம்…