×

திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான காப்பகத்திற்கு பூட்டு போட்டு போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்திற்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், 12 பேர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இது தொடர்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, தமிழக சமூக நலத்துறை குழு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையில் ஒரு குழு, மாநகர போலீஸ் சார்பில் ஒரு குழு என 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த குழுவினர் காப்பகத்திற்கு எந்த பகுதியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. அதனை கொடுத்தது யார்? என விசாரணை நடந்துள்ளது. இதுபோல் சேவாலய ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டியில் காப்பகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து வருவாய்த்துறையின் சார்பில் நேற்று அந்த காப்பகத்திற்கு பூட்டு போடப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பலியான மாணவர்கள் பாபு, மாதேஷ், ஆதீஸ் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்து தகனம் செய்யப்பட்டது.

Tags : Tirupur , 3 students were killed near Tirupur, the shelter was locked and secured by police
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...