×

தடையை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல்: ஓலா, உபருக்கு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டும் அதை மீறி இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்  என்று அதிகாரிகளுக்கு ேபாக்குவரத்து அமைச்சர் பி.ஸ்ரீராமுலு  உத்தரவிட்டார். இது குறித்து பெங்களூரு விதானசவுதாவில்  செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் இயங்கிவரும் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பொதுமக்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்து  வஞ்சித்து வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது. பயணிகளிடம் எவ்வளவு கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்று அரசு கட்டண நிர்ணயம் செய்துள்ளது. அதை மீறி  வசூலிக்கும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  சமீப நாட்களாக மாநில அரசிடம் அனுமதி பெறாமல், ஓலா, உபர் உள்ளிட்ட வாகன  நிறுவனங்கள் கட்டணங்களை அதிகமாக உயர்த்தி வசூலித்து வருவதாக புகார் வந்தது.  இது ெதாடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதுடன் மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம். உத்தரவை மீறி சில வாகனங்கள் இயங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதை மீறி  இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ேளன்’ என்று கூறினார். 


Tags : Ola ,Uber , Vehicles impounded for violating ban: Warning to Ola, Uber
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...