×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரியில் நாளை கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு வாங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி வரும் 12-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூரிலும் கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையின் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : Nilgiris ,Chennai Meteorological Inspection Centre , Nilgiris, tomorrow, heavy rain, warning, weather, center, information
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...