திருப்பதியில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்: பேட்டியளிக்க மறுப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் பேட்டியளிக்க மறுத்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். தொடர்ந்து திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் சென்னை புறப்பட்டார்.

Related Stories: