சென்னை தி.நகரில் தீபாவளியையொட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ம் தேதி வரை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும் சரக்கு, வணிக ரீதியான வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் இரவு 11 முதல் காலை 7 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.

Related Stories: