×

வரும் 19ம் தேதி கீச்சலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் வருகின்ற 19 ந் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்துத் துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.  எனவே பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, உள்ளிட்ட தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Tags : Keechalam , On the 19th, there will be a public relations project camp in Keechalam village
× RELATED கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்