×

என்னை வைத்துக்கொண்டே போன் செய்து ‘ஐ லவ் யூ’ சொல்லி முத்தம் கொடுக்கிறார்; சின்னத்திரை நடிகையுடன் நெருக்கமாக இருந்து என்னை ஏமாற்றி விட்டார்: காதல் கணவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் நடிகை திவ்யா பரபரப்பு புகார்

சென்னை: என்னை வைத்துக்கொண்டே போன் செய்து ‘ஐ லவ் யூ’ சொல்லி சின்னத்திரை நடிகைக்கு முத்தம் கொடுக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று காதல் கணவர் மீது நடிகை திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா (35). இவருக்கு 2012ல் திருமணம் நடந்து 6 வயதில் மகள் உள்ளார். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக நடித்தார். அப்போது, அதே தொடரில் கதாநாயகனாக நடித்த அர்னவுடன் காதல் ஏற்பட்டு பதிவு திருமணம் செய்தார். இதற்கிடையே திவ்யா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதற்கிடையே அர்னவுக்கு மற்றொரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து திவ்யா அவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். பிறகு அர்னவ் திவ்யாவை பிரிந்து அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே திவ்யா தனது திருமணம் குறித்தும், காதல் கணவர் நடிகர் அர்னவ் குறித்தும் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார். இது வைரலானது. இதனால் நடிகர் அர்னவ் (33) ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் அளித்தார். அதில், என் மனைவி திவ்யா என்னுடைய சம்மதம் இல்லாமல் என் குழந்தையை கலைக்க அவரது நண்பர் ஈஸ்வர் உதவியுடன் திட்டம் தீட்டியுள்ளார். இதுபற்றி போலீசார் நடிகை திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அர்னவ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா பரபரப்பு புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் சின்னத்திரை நடிகை அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து எனது கணவரிடம் கேட்ட போது முறையாக பதில் கூறிவில்லை. என்னை கேலி செய்யும் வகையில், என் முன்பே அந்த நடிகைக்கு போன் செய்து ‘ஐ லவ் யூ’ என்று கூறி முத்தம் கொடுத்தார்.

இதனால் மனமுடைந்த நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டேன். எங்களது திருமண போட்டோ மற்றும் வீடியோவையும் வெளியிட்டேன். நான் அர்னவால் கர்ப்பமாக இருக்கிறேன். இதுகுறித்து நான் எந்த விபரங்களும் வெளியிட கூடாது என்று அர்னவ் மிரட்டி வருகிறார். நான் நடிக்கும் ஷூட்டிங் பகுதிக்கு வந்த நடிகை அன்ஷித்தாவிடம் கேட்டபோது அவர் என்னை தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்தார். அதோடு இல்லாமல் எனது குழந்தை வயிற்றிலேயே செத்து போக வேண்டும் என்று சாபம் விட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் அர்னவ் கீழே தள்ளியதால் நான் மயக்கமடைந்தேன்.

அதன் பிறகு எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனே தெரிந்தவர்கள் உதவியுடன் நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனது கணவர் அர்னவுக்கு படப்பிடிப்பு இல்லாத காலத்தில் நான் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கினார். நான் எனது கணவருடன் வாழ விரும்புகிறேன். ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார். என்னுடையே வாட்ஸ் அப், செல்போன், இன்ஸ்டாகிராம் பக்கம் என அனைத்தையும் பிளாக் செய்து விட்டார். என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Divya , He keeps calling me and saying 'I love you' and giving me a kiss; Being close to small screen actress cheated on me: Actress Divya complains to Commissioner's office against romantic husband
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்