×

‘நோய் நாடி, நோய் முதல் நாடி….’ உலக யோகா தினத்தை முன்னிட்டு திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை!!

டெல்லி : உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், யோகக்கலை அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக யோகா தினத்தை முன்னிட்டு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்கும் நிலையிலும் யோகா மீதான ஈர்ப்பு யாருக்கும் குறையவில்லை என்றார். தற்போதைய சூழலில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கூட யோகா பயிற்சிகள் மூலமாக நோய்களை குணப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். நோயின் காரணத்தை அறிந்து அதனை தணிக்கும் வழிகளை ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும்படி செய்ய வேண்டும் என்று பொருள்படும் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்புச் செயல்’ என்ற திருக்குறளை பிரதமர் மேற்கோள்காட்டி பேசினார். நோயாளிகளை குணப்படுத்தும் ஆயுதமாக யோகக்கலை இருப்பதாகவும் யோகா பயிற்சி மூலமாக சுவாச பிரச்சனைகள் தீர்வு கிடைப்பது சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். இதனிடையே உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. லடாக் எல்லையில் பாங்காக் ஏரி அருகே இயற்கை எழில் சூழ்ந்த பின்னணியில் இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டனர்.அருணாச்சலப் பிரதேசத்திலும் துணை ராணுவப்படையினர் பலவிதமான யோகாசனங்களை நிகழ்த்தினார்கள். லோகித்பூரில் குதிரையில் இருந்தவாறு வீரர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டது வியப்பை ஏற்படுத்தியது….

The post ‘நோய் நாடி, நோய் முதல் நாடி….’ உலக யோகா தினத்தை முன்னிட்டு திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Thirukurala ,World Yoga Day ,Delhi ,Tirukkurala ,
× RELATED சொல்லிட்டாங்க…