×

வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் அன்னதானம் நடைபெறும் இடங்கள் பட்டியல்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்

சென்னை: வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னையில் ஒரு மாதம் அன்னதானம் நடைபெறும் இடங்கள் மற்றும் பட்டியலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடுகின்ற வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “வள்ளலார்-200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, முதற்கட்டமாக சென்னையில் முதல் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியலை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.


Tags : Chennai ,Vallalar Mupperum Festival ,Minister ,Shekharbabu , Vallalar Mupperum Festival List of Alms Places in Chennai: Released by Minister Shekhar Babu
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...