×

பெலாரஸ் நாட்டை சேர்ந்தவர் மனித உரிமை ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ரஷ்ய, உக்ரைன் அமைப்புகளுக்கும் பகிர்வு

ஓஸ்லோ: இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும், ரஷ்யா மற்றும் உக்ரைன் அமைப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசும் நார்வேயில் நேற்று அறிவிக்கப்பட்டது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போரடிய பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பின் நினைவு குழு, மனித உரிமைகளுக்கான மையம் என்ற உக்ரைன் அமைப்புக்கும் இந்த பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : Nobel Peace Prize for Belarusian Human Rights Activist: Shares with Russian, Ukrainian Organizations
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...