×

விவசாயிகள் சொந்த நிலங்களில் மரக்கன்று நட விரும்பினால் இலவசமாக வழங்கப்படும்; வனத்துறை அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான  நிலங்களில் மரக்கன்றுகளை நட விருப்பம் தெரிவித்தால் இலவசமாக வழங்கப்படும்  என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதில் பெறும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை இணைய தளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குனர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8வது தளம், சைதாப்பேட்டை, சென்னை -600 015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Forest Department , If the farmers want to plant saplings in their own land, it will be provided free of charge; Notification of Forest Department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...