நாகர்கோவிலில் பங்களா வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து விபச்சாரம்: 2 பேர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் சைமன்நகர் பூங்காநகர் 2 வது அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் சிலர் தங்கி இருப்பதாக நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு வீட்டில் இளம்பெண் மற்றும் வாலிபர்கள் சிலர் சென்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து ஆசை  வார்த்தை கூறி, விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார், இது தொடர்பாக வெட்டூணிமடம் பகுதியை சேர்ந்த செல்வி (38), மண்டைக்காடு காட்டுவிளையை சேர்ந்த ஜூஸ் பிரவின்சன் (38) ஆகியோரை கைது செய்தனர். பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: