திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் அருகே முற்றுகையில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். த.பெ.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: