×

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது, விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு: 19 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது. 9 கிலோ 705 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,09,060 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 30.09.2022 முதல் 06.10.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது. 9 கிலோ 705 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,09,060, மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, M-1 மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர்  கடந்த 01.10.2022 மதியம் மாதவரம், அம்பேத்கர் நகர், தண்ணீர் தொட்டி அருகில் கண்காணித்து. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1.அருண், வ/32, த/பெ.அன்பு, வ.உ.சி. தெரு, உடையார் தோட்டம், மாதவரம், சென்னை, 2.மணிகண்டன் (எ) பிள்ளையார், வ/19, த/பெ.மாயகிருஷ்ணன், அம்பேத்கர் நகர் 1வது தெரு, மாதவரம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில்,  காவல் குழுவினர் கடந்த 02.10.2022 அன்று கொடுங்கையூர் பகுதியில் கண்காணித்து சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 1.வெங்கடேஷ் (எ) கருக்கா வெங்கடேஷ் வ/34, த/பெ.ஏழுமலை, எண்.59/29, 7வது தெரு, சந்திரசேகர் நகர், கொடுங்கையூர், சென்னை 2.கிருஷ்ணமூர்த்தி (எ) ஊசி, வ/27, த/பெ.கண்ணன், எண்.24/72, 8வது தெரு, எம்.ஜி.ஆர் நகர், கொடுங்கையூர், சென்னை 3.கோவிந்தராஜ், வ/34, த/பெ.பாண்டுரங்கன், எண்.59/29, 7வது தெரு, கொடுங்கையூர், சென்னை ஆகிய மூவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கடந்த 05.10.2022 அன்று கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் வியாசர்பாடி, சி.கல்யாணபுரம், 4வது தெரு, எண்.30 என்ற முகவரியில் உள்ள வீட்டை கண்காணித்த போது, அங்கு மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மேற்படி வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த சுரேந்தர், வ/25, த/பெ.ஜெயசீலன், எண்.30, 4 வது தெரு, சி.கல்யாணபுரம், வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்  பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த ஒரு வாரத்தில் 115 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதுவரை, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 631 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,447 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 721 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.  



Tags : 15 cases registered for possession and sale of narcotics including ganja: 19 criminals arrested
× RELATED சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி:...