×

பசுமை தமிழ்நாடு இயக்கதின் மூலம் மரக்கன்றுகளை எளிதில் பெற இணைய முகவரி, அஞ்சல் முகவரி வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். தமிழக வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையில், வேளாண் பெருமக்கள் தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேளாண் பெருமக்கள், மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை இணைய தளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, வேது தளம்., சைதாப்பேட்டை சென்னை.600015 என்கிற இவ்வலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997632 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.


Tags : Green ,Tamil Nadu , Publication of Green Tamil Nadu Movement, Sapling, Web Address, Postal Address
× RELATED பீர்க்கங்காய் கிரேவி