×

ஐயப்பன்தாங்கலில் டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.63.40 லட்சம் மோசடி: தேனி ஆசாமி கைது

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஐயப்பன்தாங்கல் பகுதியில் ஒருவரின் மகனுக்கு டாக்டர் சீட்டு வாங்கி தருவதாக ரூ.63.40 லட்சம் மோசடி செய்த தேனி ஆசாமியை இன்று போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையகத்துக்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவு ஆவண தடுப்பு பிரிவில், கடந்த ஜனவரி 10ம் தேதி ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த கதிரவன் (49) என்பவர் புகார் அளித்திருந்தார். அப்புகாரில், தனது மூத்த மகனை டாக்டர் படிப்பு படிக்க வைப்பதற்காக, மனைவியின் சகோதரர் ராமநாதன் (43) என்பவர் மூலமாக தேனி மாவட்டத்தை முருகன் (63) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

எங்களிடம் டாக்டர் பினு என்பவர் மூலமாக மணிபால் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சீட் வாங்கி தருவதாக முருகன் உறுதியளித்தார். இதை நம்பி அவரிடம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.63.40 லட்சத்தை கொடுத்திருக்கிறோம். எனினும், அவர் எனது மகனுக்கு சீட் வாங்கி தராமல் பணத்தை ஏமாற்றி வருகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதிரவன் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எல்லை வரம்பின் காரணமாக ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவண தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். பின்னர், இவ்வழக்கு தொடர்பாக தேனி மாவட்டத்துக்கு விரைந்து சென்று, பணமோசடியில் ஈடுபட்ட முருகனை ஆவண தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் இன்று காலை ஆவடி ஆவண தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், பிடிபட்ட முருகனை விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Ayyappanthangal ,Theni Asami , Rs 63.40 Lakh Fraud for Buying Doctor Seats in Ayyappanthangal: Theni Asami Arrested
× RELATED சென்னையில் இருந்து கேரளாவிற்கு...