×

ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: மியான்மர் நீதிமன்றம் அதிரடி

பாங்காக்: மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்தாண்டு கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடந்த மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் டோரு குபோடா கடந்த ஜூலை 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குபோடாவுக்கு, மின்சாதன பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள், வன்முறையை தூண்டுதலின் கீழ் 3 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை மியான்மர் நீதிமன்றம் வழங்கி உள்ளது.


Tags : Myanmar court , Japanese journalist sentenced to 10 years in prison: Myanmar court takes action
× RELATED ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டு சிறை:...