நெல்லை அரசு பொருட்காட்சி பணியில் இருந்த சென்னை ஆர்ஓ அலுவலக உதவியாளர் மாரடைப்பால் சாவு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அன்பழகன் (45). சென்னையிலுள்ள தலைமையிட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 21ம் தேதி நெல்லையில் அரசு பொருட்காட்சி துவங்கியது. இதன் வரவு, செலவு கணக்குகளை பார்க்கும் 3 பேர் கொண்ட குழுவில் அன்பழகனும் இடம் பெற்றிருந்தார். இதனால் அவர் கடந்த 21ம் தேதி நெல்லை அரசு பொருட்காட்சி பணிக்கு வந்தார். அங்குள்ள நெல்லை செய்தி மக்கள் தொடர்பு துறை அரங்கில் இரவு நேர பணியாற்றி வந்தார். பணி முடிந்ததும் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்த அன்பழகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த சக ஊழியர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்பழகனை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அன்பழகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: