சிவகாசியில் கடைசி கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்பு: வெளியூர் வாடிக்கையாளர்கள் படையெடுப்பு

சிவகாசி: சிவகாசி பட்டாசு கடைகளில் வெளியூர் வாடிக்கையாளர்கள் பட்டாசு வாங்க குவிந்து வருவதால் கடைசி கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆடி 18ம் தேதி வியாபாரிகள் விற்பனையை துவக்கினர். ஆரம்பத்தில் கடைகளில் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயூதபூஜை முடிந்து வெளியூர் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் ேநற்று ஏராளமானோர் வர துவங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளை விற்க தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக சிவகாசியில் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வாங்கினர். பட்டாசு கடை வியாபாரிகளும் வாடிகைகையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல ரகங்களில் பட்டாசுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். சிவகாசியில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை களைகட்டியதால் பட்டாசு கடை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் சிவகாசி பஸ்நிலையம், சாத்தூர் ரோடு பகுதியில் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பட்டாசு கடை உரிமையாளர் திருமூர்த்தி கூறுைகயில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஒரு மாதகாலமாக வெளியூர் வாடிக்ைகயாளர்கள் அதிகளவில் வரவில்லை. இதனால் இந்த ஆண்டு விற்பனை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் வெளியூர் வியாபாரிகள் வர துவங்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 50 முதல் 70 சதவீதம் வரை டிஸ்கவுன்ட் விலையில் பட்டாசு விறப்னை செய்யப்படுகிறது.

 சிவகாசியில் பட்டாசு குறைந்த விலையில் கிடைப்பதால் வெளியூர் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் 40 சதவீதம் மட்டுமே உற்பத்தி பணி நடைபெற்றுள்ளதால் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது’ என்றார்.

Related Stories: