×

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம்: ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தகவல்

நெல்லை: ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட கற்றாழை டர்பைன் வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை டர்பைனை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்காலத்தில் 7 மேகவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட டர்பைன் தயாரிக்க உள்ளதாக கூறினார்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் காற்று வளம் சுமார் 30 ஜிகாவாட் உள்ளதால் அங்கு காற்றாலை நிறுவ உள்ளதகவும் இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரம் விடுவிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டியவர் இதற்கு போதுமான வாய்ப்பும் வளமும் இந்தியாவில் இருப்பதாக கூறினார். சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என இணை அமைச்சர் பகவந்த் குமார் உறுதியளித்துள்ளார்.   


Tags : Rameswaram ,Dhnushkodi ,Union ,Co ,-Minister ,Bhagavant Kumar , Rameswaram Dhanushkodi Wind Power Generation Turbine Project
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...