×

மியான்மரில் சிக்கி தவித்தவர்களில் 13 பேர் மீட்பு மற்றவர்களும் விரைவில் திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்: தமிழிசை தகவல்

சென்னை: மியான்மரில் சிக்கி தவித்தவர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மற்றவர்களும் விரைவில் தாயகம் திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். புதுவை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மியான்மரில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சகோதரர்கள் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிக்கொண்ட சகோதரர்களை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவர்கள் மியான்மரில் சிக்கிக்கொண்ட தகவல் அறிந்த உடனே ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிக்கிக் கொண்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தேன். மேலும் மற்ற சகோதரர்களையும் மீட்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Union government ,Myanmar ,Tamilisai News , Union government to rescue 13 stranded in Myanmar and return others soon: Tamilisai News
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...