×

5 நாட்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதால் பரனூர் சுங்கசாவடியில் வாகனங்கள் அணிவகுப்பு: வாகன போக்குவரத்து மெதுவாக செல்கிறது

சென்னை: கடந்த 5 நாட்கள் தொடர் விடுமுறையை முடித்து கொண்டு சென்னையை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்து அணிவகுத்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை எதிரொலி காரணமாக, சென்னையில் இருந்து லட்சகணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் மீண்டும் தென்மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னை நோக்கி அதிகமான வாகனங்கள் செல்வதால் பரனூர் சுங்கசாவடியில் வாகனங்களின் வரத்து அதிகரித்து பல கிலோ மீட்டர் அணிவகுத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் காவலர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Paranur tollbooth , Vehicles line up at Paranur toll booth as commuters return home after 5 days: Vehicular traffic slows down
× RELATED தொடர் விடுமுறை முடிந்து சென்னை...