சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: லாட்ஜ் ஊழியர் கைது

சென்னை: பெண் விவகாரத்தில் சக ஊழியரை சிக்கிவிட, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வெடிக்க போவதாக கடந்த 2 நாட்களுக்கு முன் தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம நபர் செல்போனில் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வில் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில், மர்ம நபர் பேசிய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அந்த நம்பர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் ஒரு பெண்ணுக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், தனது செல்போன் தொலைந்து விட்டது. இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார். பின்னர் அந்த செல்போன் சிக்னலை வைத்து, சென்னை மூலக்கொத்தளம், சி.பி.ரோட்டில் வசித்த சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Related Stories: