×

கடையம் ஒன்றியம் குளக்கரையில் 200 பனை விதைகள் நடவு

கடையம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கடையம் ஒன்றியம் முதலியார்பட்டி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்   நூறு சதவீதம் மானியத்தில் நீர்வள நிலவள திட்ட மாதிரி கிராமத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக 200 பனை விதைகள் அய்யம் பிள்ளை குளத்து கரையில் நடவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முகைதீன் பீவி அசன், துணை தலைவர் பாசுல் அசரப், ஊராட்சி செயலர் துரைமுருகன், வேளாண்மை உதவி இயக்குநர்  ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளாண்மை உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,  தொழில் நுட்ப மேலாளர் நாகராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Khadayam Union , Plant 200 palm seeds on the banks of the pool at Khadayam Union
× RELATED கடையம் ஒன்றியம் குளக்கரையில் 200 பனை விதைகள் நடவு