தேசிய விளையாட்டு போட்டி; 200மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் அர்ச்சனா தங்கம் வென்றார்

காந்திநகர்: 36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23 வினாடிகளை கடந்துதங்கம் வென்று அசத்தினார். அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 35கி.மீட்டர் நடை போட்டியில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான  ராம் பாபூ  2 மணி 36 நிமிடம் 34 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதியதேசிய சாதனையுடன் தங்கம் வெற்றார். ஹரியானாவைச் சேர்ந்த ஜுன்ட் கான் 2:40.51 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.நேற்றைய 5ம் நாள் முடிவில் சர்வீஸ் அணி 39 தங்கம் உள்பட 86 பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 14 தங்கம் உள்பட 44 பதக்கத்துடன் 5வது இடத்தில் உள்ளது.

Related Stories: