சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகரில் வசித்து வரும் சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரனை பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பூக்கடையில் லாட்ஜில் வேலை பார்த்தபோது விரோதம் ஏற்பட்ட உடன் பணியாளரை போலீசில் சிக்க வைக்க மிரட்டல் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.   

Related Stories: